என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலப்பு திருமணம்"
ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்ட கார்லதின்ன கிராமத்தை சேர்ந்த சிவய்யா மகள் மீனாட்சி (வயது24). அதே ஊரை சேர்ந்த நல்லப்பா என்னும் வேற்று மத வாலிபரை காதலித்து குடும்பத்தினரை எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மீனாட்சியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்து எந்த சுப காரியத்திற்கும் அழைப்பதில்லை. மீனாட்சி- நல்லப்பா தம்பதிகளுக்கு விதேஷ் (வயது3), கீர்த்தி1) குழந்தைகள் பிறந்தனர்.
குழந்தைகளை பார்த்த மீனாட்சியின் பெற்றோர் மற்றும் சகோதர-சகோதரிகள் மீனாட்சியுடன் பேசுவதும், அவர் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதும் ஒன்றுசேர ஆரம்பித்தனர். இதை கவுரவக் குறைவாக நினைத்த மீனாட்சியின் சித்தப்பா மகன் ஹரி ஆத்திரமடைந்தார்.
ஏற்கனவே மீனாட்சி தம்பதியினரை ஊரை விட்டு ஓடிபோய் விட வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்த ஹரிக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று கத்தியுடன் வீட்டில் புகுந்து மீனாட்சி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மீனாட்சியின் மாமியார் சுப்பம்மா காலை பிடித்து கெஞ்சினார் ஆனாலும் உதரி தள்ளி படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு நிதானமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
மோட்டார் சைக்கிளில் ஊரைவிட்டு தப்பியோட முயன்ற ஹரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #HonourKilling
புதுவை அரசின் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.
அதன்படி அரசாணை எண். 02/2018-19 Wel(SCW), 07.09.2018 வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Narayanasamy #InterCasteMarriage
திண்டுக்கல் அருகில் உள்ள கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது26). இவரும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மனோகரி (24) என்பவரும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை.
கணவன்-மனைவி இருவரும் குரும்பபட்டியில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று மனோகரியின் உறவினர்கள் அங்கு வந்து தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். பின்னர் அவரை காரில் கடத்தி சென்றனர். இது குறித்து விஜய் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது உறவினர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த மனோகரி தன்னை கடத்தியதாக 3 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பொன்னுத்தாய் (55) என்பவரை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தாய் வண்ணக்கிளி, மாமா வாசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் முகாபர்பூர் நகரம் அருகில் உள்ள அபி சாப்ரா கிராமத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்னொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே கலப்பு திருமணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் துப்பாக்கியால் சுட்டதில் நவின் மாஞ்சி என்ற 22 வயது வாலிபர் குண்டு பாய்ந்து பலியானார். தலித் பிரிவைச் சேர்ந்த இவர் தான் திருமண ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார். இது தொடர்பாக மணமகனின் மைத்துனர் முகேஷ்குமார் என்பவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் மூண்டது. கார், வேன்கள், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிலர் மணமகளை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் திருமண கோஷ்டியினர் அணிந்திருந்த நகைகளையும், செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து அந்த கிராமத்துக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Dalitleaderdead #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்